சினிமா பிரதான செய்தி மன்னார்

ஐங்கரசர்மாவை நீக்கி புதிய உறுப்பினரை நியமிக்க டெலோ முடிவு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கரசர்மாவுக்கு பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிக்க கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட குறித்த நகர சபை உறுப்பினர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

அதனை பரிசீலினை செய்த தமிழீழ விடுதலை இயக்கம், அவர் வகித்த மன்னார் நகர சபை உறுப்பினர் பதவிக்கு, கட்சி உறுப்பினரும் மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிட்டவருமான சமாதான நீதவான் என்.கணேசலிங்கத்தினை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Related posts

கபூர் கட்டிடத்தில் 200 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல்

G. Pragas

குழந்தையொன்று பிறந்து 30 நிமிடத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்

Tharani

கடற்படை காவலில் 52 பேர்; ஒலுவிலுக்கு அனுப்ப நடவடிக்கை!

G. Pragas