செய்திகள் பிராதான செய்தி

ஐதேகவின் சிசிடிவி காட்சிகள் என்னிடமுள்ளது – வசந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை. மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் சி.சி.டி.வி காட்சிகள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.

அத்தோடு தான் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், தனது இல்லத்திற்கு வந்து அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் வசந்த சேனநாயக்க கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களை அடுத்து, வசந்த சேனநாயக்க கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி

G. Pragas

தீப்பரவல் கட்டுக்குள் வந்தது!

G. Pragas

எச்சரிக்கை! இணையம் ஊடாக நிதி மோசடி

G. Pragas

Leave a Comment