in

ஐதேக தேசிய அமைப்பாளர் பதவியை தகுதியானவருக்கு வழங்குக – நவீன்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தான் ஆட்சேபிக்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன், தான் கட்சியின் ​நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்பட விரும்புவதாகவும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களை விட்டுவிட்டு இருப்போரை பாருங்கள் – இப்படி சொல்கிறார் இனியபாரதி

எரிபொருள் விலையை உயர்த்த ஜனாதிபதி மறுப்பு!