செய்திகள் பிந்திய செய்திகள்

ஐநா செல்ல விடாமல் புலம்பெயர் தமிழர் மனதை மாற்றுவேன் – பல்லேவத்த

புலம்பெயர் தமிழர்களின் மனங்களை தான்னால் மாற்ற முடியும் என்று ஜனாதிபதி வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

புலம்பெயர் தமிழர்களின் மனங்களை மாற்றி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை அகற்றிக்கொள்ள முடியும். அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்றிருந்த நான் புலம்பெயர் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தேன்.

இதன்போது ஈழக்கொடி ஏற்றப்பட்டுள்ள குறித்த நிகழ்வில் என்னால் உரையாற்ற முடியாது என தெரிவித்தேன். இதன்காரணமாக ஏற்பாட்டாளர்கள் நான் உரையாற்றும்போது அந்தக்கொடியை அகற்றினர் – என்றார்.

Related posts

உம்ரா விசா வழங்குவதை நிறுத்தியது சவுதி

G. Pragas

பாவ விமோசனம், குழந்தை பாக்கியம் அருளும் மாசிமகம்!

Bavan

21ம் 22ம் திருத்த சட்டம் சிறுபான்மை கட்சிகளுகமகு ஏற்புடையதில்லை

Tharani