செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

ஐந்தாவது முறையாகவும் ஐபிஎல் சம்பியனாக முடிசூடியது மும்பை!

இந்தியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதியாட்டத்தில் இன்று (10) மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இதன்படி 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை ரோஹித் சர்மா – இசான் கிசான் ஆகியோரின் நிதான அதிரடியால் விரட்டி அடித்து வெற்றி பெற்று சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் முடிசூடியுள்ளது.

மஹேல ஜயவர்த்தனவின் பயிற்றுவிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றிய மூன்றாவது ஐபிஎல் கிண்ணம் இதுவாகும்.

இப்போட்டியில் முன்னதாக ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் சிரேஸ் ஐயர் (65), ரிஷப பாண்ட் (56) ஓட்டங்களை பெற்றதுடன், மும்பையின் பந்துவீச்சில் டிம் போல்ட் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய மும்பை 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 157 ஓட்டங்களை பெற்று டெல்லியை தோற்கடித்து சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா (68), இசான் கிசான் (33) ஓட்டங்களை பெற்றனர். டெல்லியின் பந்துவீச்சில் அன்ரித் நோர்ஜே இரு விக்கெட்களை வீழ்த்தினார்.

Related posts

கவனயீன மரணங்களை அடுத்து கேதீஸ்வரன் விடுத்த விசேட அறிவிப்பு!

G. Pragas

சிறுபோக பயிர் கொள்வனவு விலை நிர்ணயம்!

Tharani

சிவகார்திகேயனின் ‘டாக்டர்’ பட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல்!

Bavan