கிழக்கு மாகாணம் சிறப்புக் கட்டுரை செய்திகள் பிரதான செய்தி

ஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்களத்தில் ஐந்து ஆனசங்களுக்காக 304 பேர் போட்டிக்காக களமிறங்கவுள்ளனர்

2019ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புகளுக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில் 4 இலட்சத்து 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது. இதன்படி மட்டக்கள்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் 1 இலட்சத்து 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்து 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுனதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோரளைப்பற்று வாளைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்

இத்தேர்தலில் இம்மாவட்டத்திலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமழ் தேசியக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஞானமுத்து ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரனுமாக மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

reka sivalingam

சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள்

Tharani

கறிக்கடையாக மாறிய யாழ் மாநகர சபை

கதிர்