இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் ‘ஐ.நா மனித உரிமைகள் சபையின் அவசர கவனத்தை ஈர்க்கும் சூழ்நிலையை இலங்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது தொடர்பிலும் அல்லது பிரச்சார அடிப்படையிலான அரசியல் நடவடிக்கை இருக்குமாயின் அது தொடர்பில் ஐ.ந மனித உரிமைகள் சனபயும் பார்வையாளர் நாடுகளும் தமது சொந்த தீர்ப்பை சொல்வதற்கு விட்டுவிடுகிறேன்’ என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் மாநாடு நேற்று (23) ஆரம்பமான நிலையில் சூம் செயலி மூலம் இன்று (24) மாலை பங்கேற்று அரசின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மேலும்,
உலகின் இரக்கமற்ற ஒரே பயங்கரவாத அமைப்பான புலிகளிடம் இருந்து பிராந்திய ஒருமைப்பாட்டை, இறையாண்மையை மற்றும் ஒற்றையாட்சி அரசை பாதுகாக்க இலங்கை அரசு தற்பாதுகாப்புடன் செயற்பட்டது.
2015ம் ஆண்டு பதவியேற்ற முன்னைய அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இணை அனுசரனையாளராக இணைந்தது. இது எமது சொந்த நாட்டுக்கு எதிரானது. 2019ம் ஆண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பெற்ற ஆணையின் மூலம், இந்த தீர்மானத்தை இலங்கையர்கள் நிராகரித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அறிக்கை வடிவில் விரிவான உரை,