கிளிநொச்சி செய்திகள்

ஒத்துழைப்பு கிடைக்கவில்லை: விசனப்படும் கிளிநொச்சி இளைஞர்கள்!

நாடளாவிய ரீதியான சுவரோவியம் வரையும் பணியில் கிளிநொச்சி இளைஞர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அவர்களுக்கான ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லையென விசனப்படுகின்றனர்.

“கிளிநொச்சியின்  சுயாதீன இளைஞர்களின் சுவரோவிய பணியை வெளியில் தெரிய படுத்துவதற்கு குறிப்பிட்ட ஒருசில ஊடகங்களைத் தவிர வேறு எந்த ஊடகங்களும் முன்வரவில்லை.

அதுமட்டுமின்றி கிளி  மாவட்டத்தில் இருக்கும் கலைஞர்களின் இவ்வாறான படைப்பையும்  இளைஞர்களின் ஒற்றுமையையும் ஊக்கப்படுத்துவதற்கு எவரும் முன்வரவில்லை எம்மை கண்டுகொள்ளவும் இல்லை காரணம் எமது இவ்  செயற்திட்டம் ஆனது கட்சி சார்ந்தோ அல்லது அமைப்புகள் சார்ந்தோ இடம்பெறவில்லை என்பதே ஆகும். 

ஆயினும்  எமக்கு இத்திட்டத்தினை ஆரம்பித்ததில் இருந்து நகரில் இருக்கின்ற சிறிய, நடுத்தர வர்த்தகர்களும் தனிப்பட்டவர்களுமே மட்டுமே அவர்களால் முடிந்த உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றார்கள்.

இதுவே இவ் திட்டத்தை ஒரு அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ஏதாவது அமைப்புகள் சார்ந்து நாம் ஆரம்பித்திருப்பின் எமக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெற்றிருக்கும் எமது இளைஞர்களினதும்,கலைஞர்களினதும் படைப்பு வெளிப்படுத்த படுத்தப்பட்டிருக்கும்.

கிளிநொச்சி நகரம் எமது மண் அதனை சுத்தமாகவும்,அழகாகவும் வைத்திருக்க வேண்டியது எமது கடமை இதுவே எமது இளைஞர்களின் எண்ணம்.
எமது செயற்பாடு தொடரும்”.
என்றும் இவ் சுயாதீன இளைஞர்கள் எமக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

G. Pragas

அரச சேவையின் நோக்கம் வேலை வழங்குவது அல்ல!

Tharani

ஜாஎல உள்ளிட்ட பகுதிகளில் இன்று நீர் வெட்டு

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.