செய்திகள் பிந்திய செய்திகள்

ஒருவரை பலிவாங்கிய காத்திக்குத்து தாக்குதல் சந்தேக நபர் சரண்!

கம்புறுபிட்டிய நகரில் நேற்று (05) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கம்புறுபிட்டிய நகரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

மேலும் இந்த மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் காயமடைந்திருந்தார். நீண்ட காலமாக நிலவிய தகராறு ஒன்றினை மையமாக கொண்டு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கம்புறுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

Related posts

ஈழ நடிகர் முல்லை யேசுதாஸன் காலமானார்!

G. Pragas

அடாவடியாக செயற்பட்ட மின்சார சபை; மறியல் செய்து 50 கிராமங்கள் மின் ஔி பெற்றன

G. Pragas

பிரித்தானியாவில் சுதந்திர தினத்தை எதிர்த்து போராட்டம்!

G. Pragas

Leave a Comment