in ,

ஒரு காரணத்துக்காக மட்டும் மாகாண எல்லையை கடக்க அனுமதி

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனைய தரப்பினருக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனினும், மனிதநேய அடிப்படையில் நெருங்கிய உறவினர்களின் மரண சடங்குகளில் கலந்துக்கொள்வதற்கு மாத்திரம் மாகாண எல்லையை கடக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எனினும், சோதனை சாவடிகளில் அதற்குரிய சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அத்தியாவசியம் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

லன்ச்ஷீட்டுகளுக்கு தடை! -நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட் இறப்புக்கள் – அதிர்ச்சித் தரும் எண்ணிக்கை