in ,

ஒரு சூலில் 10 குழந்தைகளை பிரசவித்து உலக சாதனை படைத்த பெண்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆபிரிக்க நாடான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.

7-ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அநுராதபுரம் சதொசவில் ஊழியர்களை மிரட்டி அபேஸ்

பொலிவூட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா