செய்திகள்

தேசிய கீத விவகாரம்; மனோ எதிர்ப்பு

இலங்கையின் 72ஆவது தேசிய தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என தெரிவிக்கப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில், சிங்கள மொழியிலான தேசிய கீதம் மாத்திரமே பாடப்படும் என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

மேலும்,

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்றபோதும் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் உள்ளது. அதேபோன்று, இலங்கையிலும் ஒருமொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று அவர் குறிப்பிட்ட இந்த கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து ஜனாதிபதிக்கு வலியுறுத்தவிருப்பதாக குறிப்பிட்டார்.

Related posts

“இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை

G. Pragas

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சஜித் அணி எதிர்ப்பு!

G. Pragas

ஜனாதிபதிக்கு ஐநா பாராட்டு!

கதிர்

Leave a Comment