செய்திகள்பிரதான செய்தி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான தந்தை மற்றும் அவரது 23, 24 வயதுடைய இரு மகன்கள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருகுழுக்களிடையே நிலவிவந்த முரண்பாடு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266