உலகச் செய்திகள் செய்திகள்

ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா!

உலகமெங்கும் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை உலக நாடுகள் அமுல்படுத்தி வந்தன.

அத்தோடு, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது பல நாடுகளும் முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தி வருகின்றன. இதனையடுத்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் ஒரு இலட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோருக்கு தாக்கியுள்ளமை பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

உயர் கல்வி நிறுவனங்களில் கற்கைக்கு வட்டியில்லாக் கடன்

கதிர்

“கலந்துரையாடலே தீர்வாகும்” – அங்கஜன் தெரிவிப்பு!

Tharani

சிஐடியில் ஆஜரானார் ஷானி

reka sivalingam