செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடியவர் பலி!

நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் ‘ஒற்றை சில்லை பயன்படுத்தி’ மோட்டார் சைக்கிள் ஓட்டப்பட்டுள்ளதால் கடவையை உடைத்துக்கொண்டு அது உள்ளேபாய, சம்பவ இடத்திலேயே அதனை ஓட்டிய நபர் உயிரிழந்துள்ளார்.

டன்பார் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயதுடைய புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

கிராம அலுவலகர் மீது தாக்குதல்; பொலிஸில் முறையீடு!

G. Pragas

“70 ஆண்டு காலமாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காணவில்லை”- சித்தார்த்தன்

Bavan

அறிவுரை சொல்ல யாருமில்லை: குட்டி ராதிகா

G. Pragas