செய்திகள் மலையகம்

ஒஸ்போன் தோட்டத்தில் மைதானம் திறந்து வைப்பு

நுவரெலியா – காசல்ட்ரி, ஒஸ்போன் பங்களா டிவிசன் இளைஞர்களின் வேண்டுகோளுக்கமை நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் இராமசந்திரன் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ப.திகாம்பரத்தால் இளைஞர் அணிக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசனின் வழிநடத்தலில் அமைக்கப்பட்ட மைதானம் இன்று (26) திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.

இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், அமைப்பாளர் நந்தகோபால் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

சொன்னதை செய்ய தவறினால் இந்த அரசை தோற்கடிப்பேன் – சஜித்

G. Pragas

வேலி பாய்ந்த பொலிஸாருடன் மோதல் – இருவர் காயம்; ஐவர் கைது!

G. Pragas

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்

கதிர்