in

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்…

சீனாவிடமிருந்து மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொள்வனவு செய்யப்படும் என்று சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரே தடவையில் கொள்வனவு செய்யும் ஆகக் கூடிய தடுப்பூசிகளின் அளவுகள் இதுவாகும்.

பீஜங்கில் உள்ள இலங்கை தூதரகம் தற்சமயம் 2021 ஓகஸ்ட் 04 மற்றும் 08 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்த அளவுகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நான்கு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் உள்ளடங்களாக இலங்கை சீனாவிடமிருந்து 12 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

நாட்டில் 8 மில்லியனுக்கு அதிகமானோருக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!