in ,

ஓட்டமாவடியில் குழாய் கிணறு அமைக்க தடை!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் குழாய் கிணறு அமைக்கும் வேலைத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு மீளாய்வு கூட்டம் அலுவலகத்தில் இடம்பெற்ற போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு தாக்கமானது வீட்டு வளாகத்தினுள் பாவனைக்கு உதவாத வகையில் குழாய் கிணறு அதிகம் காணப்படுவதால் இதில் டெங்கு குடம்பிகள் அதிகம் காணப்படுகின்றது. இதனால் குழாய் கிணறு அமைக்கும் வேலைத் திட்டங்கள் நிறுத்தப்படுவதுடன், பாவனைக்கு உதவாத குழாய் கிணறுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (150)

யாழ் பல்கலைக்கு விஜயம் செய்த கப்ரால்

மாற்றுத்தினாளிகளுக்கான தையலகம் திறப்பு!