in , ,

ஓட்டமாவடி விபத்தில் இளைஞன் பலி!

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மழை பெய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஓட்டமாவடி பாலத்துக்கு அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓட்டமாவடி, தியாவட்டவான் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்த மீறாவோடை பிரதேசத்தை சேர்ந்த எம்.ஜே.முபாரிஸ் (வயது-21) எனும் இளைஞனே இவ் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

மானிப்பாய் பெண் கொரோனாக்கு பலி!

புலிகளை உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது!