ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் விசாரணை அறிக்கையை 2 சமர்ப்பித்தோம். நாடாளுமன்றிலும் நாம் சமர்ப்பிப்போம் என்று ஆளும் கட்சி எம்பி நிமல் லான்ச தெரிவித்தார்.
இன்று (23) நாடாளுமன்றில் குறித்த அறிக்கை தொர்பான விவாதத்தின் போது இதனை தெரிவித்தார். மேலும்,
ஓ/எல் சித்தியடையாதவர் ஹரின் பெர்னாண்டோவே. ஆராய்ந்து பார்த்தால் நாங்கள் ஓ/எல் சித்தியடையாதோரா ஹரின் சித்தியடையாதவரா என்று தெரியும். ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேச ஹரினுக்கு தகுதியில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ, எனது பெயர் கரின் அல்ல ஹரின். அவருக்கு எனது பெயரை ஹரின் என சொல்ல தெரியவில்லை. ‘ஹ’ வை தவறாக உச்சரிக்கிறார். எனது கல்வி தகமையை நான் இங்கு சமர்ப்பிக்க தயார். அவர் தயாரா.
நாளை நாடாளுமன்றில் தனது தகமையை சமர்ப்பிக்கிறேன். அவரையும் சமர்ப்பிக்க சொல்லுங்கள் சபாநாயகரே என்று தெரிவித்தார்.