செய்திகள் பிரதான செய்தி

கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை முதல் முறையாக 0 டொலருக்கும் குறைவாகச் சரிந்துள்ளது.

அளவுக்கு அதிமாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்ளும்படி அடுத்தவர்களுக்குப் பணம் கொடுக்கும் அளவுக்கு விநியோகிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எண்ணெய் வைப்பதற்கான இடவசதியும் கணிசமாக குறைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்திற்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலையைப் பூஜ்ஜியத்திற்குக்கீழ் 37 டொலர் என்று West Texas Intermediate குறியீட்டுப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெய் சந்தையிலேயே தேங்கிவிட்டதாலும் அவற்றை வைப்பதற்கான இடவசதி குறைவாக இருப்பதாலும் எண்ணெயை அதிகமானோர் வாங்கி செல்லவில்லை.

கொரோனா கிருமித்தொற்றால், நாடுகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

Related posts

டுபாயில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை எகிறியது!

G. Pragas

3.5 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

G. Pragas

பிறந்தநாள் விவகாரம்; 24 பேருக்கு மறியல்!

G. Pragas