செய்திகள் பிந்திய செய்திகள்

கஜா உள்ளிட்டோரின் முடிவு சஜித்தின் தோல்வியே

சஜித் பிரேமதாசவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

நாட்டு மக்கள் இரண்டு பிரதான தரப்பு சார்ந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க போவதில்லையென அறிவித்துள்ளனர்.

எனவே சஜித்தின் பெரும் நம்பிக்கையாக காணப்பட்ட, வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு தற்போது இல்லாமல் போயுள்ளது. இதன்காரணமாக சஜித் பிரேமதாஸவின் தோல்வி தற்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது – என்றார்.

Related posts

பொது நிர்வாக அதிகாரிகளின் நாளைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

G. Pragas

யாழில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

G. Pragas

ரிஷாட்டின் சகோதரன் ரிப்கான் கைது

G. Pragas