கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

கஞ்சா கடத்தலின் தலைமையகம் வடக்கு; விழிப்புணர்வு அவசியம்!

வடக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,327 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று வடக்குக் கடற்படைக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2,096 கிலோ கஞ்சா கடற்படையால் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் 6 மாத காலப்பகுதியில் அதை விடக் கூடியதொகை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக சமூக மட்ட விழிப்புணர்வு அவசியம் என்றும் சிவில் அமைப்புகள், மதகுருக்கள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கட்டளைத் தலைமையகம் வலியுறுத்துகிறது. குறிப்பாக இளம்பராயத்தவர், கல்வி கற்போர் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை!

Bavan

உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

reka sivalingam

காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன? சர்வதேச நீதிமன்றிடம் கோரிக்கை?

Tharani