செய்திகள் பிராதான செய்தி

கஞ்சா – துப்பாக்கித் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பூண்டுலோயாவில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (03) நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ரி-56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் 31, வெற்றுத் தோட்டாக்கள் 8 மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் 13 கிலோ கிராம் கஞ்சா என்பன சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். இவர் இராணுவ வீரர் எனவும் 6 வருடங்களுக்கு முன்னர் இராணுவ கடமையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபர்கள் 63 பேரின் மறியல் நீடிப்பு

G. Pragas

ஆணையிறவு விபத்தில் ஒருவர் பலி!

G. Pragas

போரா மாநாட்டினால் இலங்கைக்கு இலாபம்

admin

Leave a Comment