செய்திகள் யாழ்ப்பாணம்

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது!

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்குப் பகுதியில் வெள்ளைவானில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று (11) மாலை மல்லாகத்தில் வைத்து காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து யுவதியையும் அவரை கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு வேறு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

Related posts

பதுளையில் காட்டுத் தீ

reka sivalingam

கோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு!

G. Pragas

அமைச்சரவை அந்தஸ்தை வைத்து சாதிக்க முடியாது – பிரசன்னா

G. Pragas