செய்திகள் தலையங்கம் பிராதான செய்தி

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று (08) மாலை தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஜடியில் ஆஜராகினார்.

இவ்வாறு ஆஜராகிய குறித்த பெண் ஊழியர் தான் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துவிட்டு சற்றுமுன் சிஐடி அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கடத்தல் தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியரின் நடத்தைக்கும் தூதரக தகவல்களுக்கும் தொடர்பில்லை என்று அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவரை சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஆஜராகி வாக்குமூல் அளிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அந்த கோரிக்கையை சுவிஸ் தூதரகம் மறுத்த வந்திருந்தது.

இதனடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த ஊழியரை நட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து சிஐடியில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையிலேயே அவர் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related posts

வான் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

Tharani

கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மறியல்!

reka sivalingam

சஜித் வென்றிருந்தால் நியாயமான சம்பளம் வழங்கியிருப்போம் – திகா

G. Pragas

Leave a Comment