செய்திகள் பிரதான செய்தி

கடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலம் காேரப்பட்டது!

கொவிட் – 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பலதரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வரலாற்றில் இன்று- (12.02.2020)

Tharani

மழை பெய்யும் சாத்தியம் உண்டு

reka sivalingam

டிக்கோயா வைத்திசாலையில் நோயாளிகளுக்கு துன்புறுத்தல்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.