செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கட்சி சார்ந்து பணியாற்றியதை நிரூபிக்க முடியுமா? – வேதநாயகன் சவால்

ஒரு அரசியல் கட்சி சார்ந்து தாம் பணியாற்றியதாக யாராவது நிரூபிக்க முடிந்தால் அதனை நிரூபித்து காட்டுமாறு ஓய்வு பெற்று செல்லும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தனது ஓய்வை அறிவித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நாகலிங்கம் வேதநாயகத்தின் பிரிவுபசார நிகழ்வு நேற்று (14) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

அரசியல் அபிலாசைகள் இருக்கின்றதே தவிர நான் ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்ல, நான் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாக நடக்கவும் இல்லை.

பலர் வந்து என்னிடம் தேர்தலில் போட்டியிட போகின்றீர்களா என கேட்டனர். அவ்வாறு ஒரு முடிவு என்னிடம் இல்லை – என்றார்.

Related posts

சமூக அபிவிருத்தி கட்சியின் மக்கள் சந்திப்பு

G. Pragas

ஷாபி விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

reka sivalingam

தேவையற்ற விதத்தில் வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுக்க வேண்டும்

Tharani

Leave a Comment