in ,

கட்டாய தனிமைப்பட்டிருந்த அகில இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் உள்ளிட்ட 22 பேர் விடுவிப்பு!

இரு வேறு ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தி, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோசலிஷ கட்சியின் பொதுச் செயலர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 22 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையிலும், பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதன் பின்னணியிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பல்லேகலை இராணுவ தனிமைப்படுத்தல் மையம் மற்றும் முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இரானுவ, விமானப்படைகளுக்குச் சொந்தமான பஸ்களில் இன்று கொழும்பு நோக்கி அழைத்து வரப்பட்டனர்.

ஓகஸ்ட் மாதத்துக்குப் பின் ரூ. 1 இலட்சம் அபராதம்!

மட்டக்களப்பில் மின் சூறாவளி! 42 வீடுகள் சேதம்!