கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்தது; சிறுவன் பலி!

மட்டக்களப்பு – கித்துள் காட்டு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளுர் தயாரிப்பிலான கட்டுத்துவக்குடன் நான்கு பேர் வேட்டைக்கு சென்ற நிலையில், குறித்த துப்பாக்கி தவறுதலான வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் கித்துள் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறிக்காந்தன் தனு என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

30 கிலோ ஹெரோயினுடன் மூவர் அதிரடி கைது!

G. Pragas

புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை! சுவிஸ் தீர்ப்பு!

Tharani

60 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Tharani

Leave a Comment