செய்திகள் பிரதான செய்தி

சுதந்திர வர்த்தக ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கை!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் ஆகியவற்றில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு 15 நாள் சம்பளத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதுள்ள ஊழியர்களே இந்த குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கட்டுநாயக்க, பியகம, கொக்கல, பல்லேகலை, மீரிகம, தங்கொட்டுவை, ஏக்கலை, ரத்மலானை உள்ளிட்ட இடங்களில் குறித்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

குறித்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நாளாந்த சம்பளம் பெறுபவர்கள் எனவும், இதன் காரணமாக, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தமது சொந்த இடங்களுக்கும் திரும்ப முடியாமல், வாடகை அறைகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோத்தா மீதான கடத்தல் குற்றச்சாட்டு சேறு பூசலே – மஸ்தான்

G. Pragas

இலங்கை கிரிக்கட்டுக்கு கோப் குழுவின் அழைப்பாணை

Tharani

சீன பயணிகளுக்கு விசேட முனையப் பகுதி

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.