கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கணவன் மனைவி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் நாகதம்பிரான் கோயில் வீதி கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம் (வயது-35), தேவி (வயது-30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வயல் வாடியில் உள்ள காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்படி பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலங்கள் உடல் கூற்று பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை!

G. Pragas

கொழும்பு – மன்னார் பேருந்தில் ஹெரோயின் மீட்பு

கதிர்

முகமாலையில் றோ.க.த.கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்!

Tharani