செய்திகள் பிரதான செய்தி

கதிர்காமத்தில் மோதல்; ஐவர் காயம்; பலர் கைது

கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் பகுதியில் நேற்று (18) மாலை இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரணை மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களுடன் மது போதையில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

reka sivalingam

பெறுமதி சேர் வரியை குறைக்க அங்கீகாரம் கிடையாது

Tharani

அநுராதபுரம் சிறையில் பிள்ளையார் ஆலயம் திறந்து வைப்பு

G. Pragas

Leave a Comment