செய்திகள் யாழ்ப்பாணம்

“கந்தகட்டிய காமண்டி” காமன் கூத்து ஆவணப்படம் திரையிடல்

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்தியா புதுச்சேரி யாழ் கலைமைய இயக்குநர் முனைவர் ஞா.கோபியின் தயாரிப்பில் உருவான “கந்தகட்டிய காமண்டி” (காமன் கூத்து) எனும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு நாளை (22) காலை 10.00 மணிக்கு இலக்கம் 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

மலையகப் பகுதியைச் சேர்ந்த கந்தகட்டிய எனும் ஊரில் வருடந்தோறும் நடைபெறும் காமன் பண்டிகை எனும் சடங்கை மையப்படுத்தி இலங்கையில் பல பகுதிகளில் திரையிடப்பட்டுவரும் மேற்படி ஆவணப்படமானது குறித்த இனக்குழுவின் வாழ்வியல் கூறுகளுடன் இரண்டறக்கலந்த சடங்கியல் நிகழ்வாக தன்னை வெளிப்படுத்திநிற்கின்றது.

இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ஞா.கோபி இந்திய தமிழ் நாடகச்சூழலில் பயிற்சிப்பட்டறைகள், அரங்கப் படைப்புகள் என தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதுடன் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு விரிவுரையாளராகக் பணிபுரிந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மழை வரலாம்?

Tharani

மின்வெட்டு அமுலாகாது – மஹிந்த

G. Pragas

தாழிறக்கம் காரணமாக டிக்மன் வீதிக்கு தடை

Tharani

Leave a Comment