கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கந்தளாய் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மற்றையவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பேராறு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று!

கதிர்

தேர்தல்கள் ஆணையாளர்களுடன் நாளை பேச்சு

reka sivalingam

பத்தேகம பிரதேச சபை தலைவர் கைது

G. Pragas