in

கனடாவில் வேலை பெற்று தருவதாக பண மோசடி – ஒருவர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பாணந்துறை பகுதியில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வசூலித்தும் உள்ளார்.

பண வசூலிப்பின் பின்னர் சந்தேக நபர் காணாமல்போயுள்ள நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.1000 வர்த்தமானியை இரத்து செய்ய கோரிய மனு மீதான தீர்ப்புக்கு திகதி

ஊடகவியலாளர்களுக்கு சலுகை அட்டை!