செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

கன்னத்தில் அறைந்தவரை தேடி அடாவடி புரிந்த இராணுவம்!

வடமராட்சி – கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் கடந்த தைப் பொங்கல் தினத்தன்று இராணுவ வீரர் ஒருவரது கன்னத்தில் அறைத்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை இராணுவத்தினர் இன்று வரை தேடி வருகின்றனர்.

எனினும் குறித்த நபர் இராணுவத்துக்கு தண்ணி காட்டி மறைந்திருக்கும் நிலையில் நேற்று (8) நள்ளிரவு 11 மணியளவில் அவரது, வீட்டை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை தாக்கி, உடமைகளையும் சேதமாக்கியுள்ளனர்.

https://www.facebook.com/100000160981027/posts/3583170691698262/

இதன்போது வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நிதானம் இழந்த நிலையில் காணப்பட்ட இராணுவத்தினர் தமது கைபேசி, தொப்பி ஆகியவற்றை சம்பவம் நடைபெற்ற வீட்டு வளவில் தவற விட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை தேடப்படும் நபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடைபெற்ற அன்று வீதியில் சிறுமி ஒருவரை மோதுவது போல் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறி, அவரை இராணுவ வீரர் கண்டித்த போது எழுந்த முரண்பாட்டிலேயே இராணுவ வீரரது கன்னத்தில் அறைந்திருந்தார். இராணுவ வீரரும் பதிலுக்கு அறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில், வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறித்த தேடப்படும் நபரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பான பருத்தித்துறை நீதிமன்ற வழக்கிலும் இவரது பெயர் தாக்கல் செய்யப்படாத நிலையிலேயே இராணுவத்தினர் அவரை தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061