சினிமா செய்திகள் நடுப்பக்க கட்டுரை

கமலின் அடுத்த படம் “விக்ரம்”

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்ததை இயக்கியுள்ள லோகேஸ் கனகராஜ் அடுத்த படத்தில் உலக நாயகனுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (07) படத்தின் தலைப்பு மற்றும் விளம்பர வடிவமைப்பு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இப்படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர் கமல் ஏற்கனவே விக்ரம் என்ற தலைப்பில் படம் நடித்திருக்கிறார். தற்போது நடித்து வரும் படத்திற்கும் விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் மற்றுமாெரு கறுப்பின இளைஞர் பொலிஸாரால் கொலை!

G. Pragas

விபச்சார விடுதி எனச் சந்தேகிக்கும் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

G. Pragas

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜலானி பிரேமதாச

G. Pragas