in ,

கம்பஹாவில் மாந்திரிக சிகிச்சையால் சிறுமி பலி!

கம்பஹா – தெலகொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் உடலில் அமானுஷ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சிறுமியை பூசைகளுக்கு உட்படுத்தி, அவருக்கு ஒருவகை எண்ணெய் பூசி, தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் பெண் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி, மயக்கமடைந்தமையினால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாந்திரிகம் செய்துவரும் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கூட்டமைப்பின் அரசியலமைப்பு பரிந்துரை வெளியீடு!

ஓ/எல் பரீட்சைக்கான ஏற்பாடுகள் யாழில் தயாரானது!