செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கரந்தனினில் வீடு ஒன்று முற்றுகை; கைகுண்டு உள்ளிட்டவை மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (08) மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரவு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நீர்வேலி, கரந்தனில் உள்ள குறித்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரதான சந்தேக நபரான மருதனார்மடம் ஜெகன் அல்லது கைலாயம் என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச் செயலுக்கு தயாராகும் வீடு முற்றுகையிடப்பட்டது.

Related posts

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் (படங்கள்)

G. Pragas

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்

Tharani

முகமாலையில் றோ.க.த.கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்!

Tharani