உலகச் செய்திகள்செய்திகள்

கருக்­க­லைப்­புக்கு அமெ­ரிக்கா தடை -உச்சநீதி­மன்­றம் அதி­ரடி

அமெ­ரிக்­கா­வில் கருக்­க­லைப்பு உரி­மையை தேசிய அள­வில் சட்­ட­பூர்­வ­மாக்­கிய 50 ஆண்­டு­கால உத்­த­ரவு நீக்­கப்­பட்டு கருக்­க­லைப்பு உரி­மைக்கு அந்­த­நாட்டு
உச்­ச­நீ­தி­மன்­றம் இன்று தடை விதித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் 1973ஆம் ஆண்­டில் ‘‘கருக்­க­லைப்பு என்­பது பெண்­ணின் தனிப்­பட்ட உரிமை. அது அர­ச­மைப்பு உரிமை’’ என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.
அதே­போல் 1992ஆம் ஆண்­டில் ‘‘22 முதல் 24 வார கர்ப்­பத்தை சம்­பந்­தப்­பட்ட பெண் சட்­ட­பூர்­வ­மா­கக் கருக்­க­லைப்பு செய்து கொள்­ள­லாம்’’ என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வில் கருக்­க­லைப்பு உரி­மை­க­ளின் சட்­டம் மாற்­றப்­பட்டு கருக்­க­லைப்பு உரி­மைக்கு அந்­த­நாட்டு உச்­ச­நீ­தி­மன்­றம் தடை­வி­தித்­துள்­ளது.

இந்­தத் தீர்ப்­புக்­க­மைய அமெ­ரிக்­கா­வின் 13 மாகா­ணங்­க­ளின் கருக் க­லைப்பு தடைச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதே­போல் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஏனைய மாகா­ணங்­க­ளில் கருக்­க­லைப்­புக்கு தடை விதித்­தல் அல்­லது கரு­க்க­லைப்­புக்­கான விதி­களைக் கடு­மை­யாக்­கும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல் போன்­ற­வற்றை நிறை­வேற்­ற­வுள்­ளது எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை, கருக்­க­லைப்பு உரி­மையை ரத்துச் செய்தமையை எதிர்த்து அமெ­ரிக்­கா­வின் பல்­வேறு மாகா­ணங்­க­ளில் பெண்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051