செய்திகள் பிரதான செய்தி

கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – பல இடங்களில் முறையிட்ட தேரர்

கருணா எனும் வி.முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் ஓமல்லபே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் இன்று (30) அவரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிஐடியிடமும் ஓமல்லபே தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.

Related posts

பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!

G. Pragas

போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

Tharani

முல்லை மாவட்ட அபிவிருத்திக்கு 2461.825 ரூபாய் நிதி

கதிர்