செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கரும்புலிகள் நாளான இன்று வட, கிழக்கில் இராணுவத்தினர் கெடுபிடி!

கரும்புலிகள் நாளான இன்று(05) அதனை யாரும் நினைவேந்தக் கூடாது என்பதற்காக இராணுவத்தாலும், படையினராலும் விசாரணைகளும் கைதுகளும் மேற்கொள்ளப்பட்டன.

01.முன்னணியின் அலுவலகம் முற்றுகைக்குள்

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு 50ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், பொலிஸினரால் அலுவலகத்துள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

02.சிறிதரனிடம் பொலிஸ் விசாரணை

கரும்புலி நாளை கொண்டாட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது காரியாலயமான அலுவலகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

03.சிவாஜிலிங்கம் கைதாகி பிணையில் விடுதலை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டமை.

04.வவுனியா தேவாலயங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

வவுனியாவின் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவின் சந்தேகத்தின் பேரில் அனைத்து தேவாலயங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படன.

05.இயக்கச்சி வெடிப்பு சம்பவம் பெண் மீதும் குற்றச்சாட்டுக்கள்

இயக்கச்சி வெடிப்புச் சம்பவத்தையடுத்து குற்றச்செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழித்தமை தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு(04) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற கைதுகள் மற்றும் விசாரணைகள் கரும்புலிகள் தினமான இன்றும்(05) மற்றும் நேற்று(04) வடக்கு,கிழக்கில் அதிகமாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத மீன்பிடி – 11 இந்திய மீனவர்கள் கைது !

reka sivalingam

கொரோனாவல் பாதிப்படைந்த சமையல்காரர்களுக்கு பயிற்சி

G. Pragas

பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரை ஏன் நீக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி

Tharani