செய்திகள் பிரதான செய்தி வவுனியா

கற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு!

வவுனியா – கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தி வைக்கபட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் இன்று (22) அதிகாலை எரியூட்டபட்டுள்ளது.

குறித்த வாகன திருத்தகம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்தகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

கவனயீன மரணங்களை அடுத்து கேதீஸ்வரன் விடுத்த விசேட அறிவிப்பு!

G. Pragas

பாபநாசம் சீன மொழியிலும் மறு தயாரிப்பு

Bavan

இன்றைய நாள் ராசி பலன்கள் (5/2) – உங்களுக்கு எப்படி?

Bavan