கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பிரான்ஸ் நாட்டின் “சிறுதுளி பெரு வெள்ளம்” எனும் இலங்கைக்கான அமைப்பினால் பொங்கல் தினத்தினை முன்னிட்டு பொங்கல் தயாரிப்பதற்கான பொருட்கள் அடங்கிய பொதிகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன நேற்று (14) வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேசத்தின் பணிச்சங்கேனி, தட்டுமுனை ஆகிய பிரதேசங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கே இவை வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் பணிச்சங்கேனி ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மனிமேகன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் இவற்றினை வழங்கி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேற்குறித்த பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். தங்களது விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் போன்றன பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டிருந்தது. இந் நிலமையினை கருத்தில் கொண்டு குறித்த அமைப்பினால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

Related posts

பெண் சடலமாக மீட்பு!

reka sivalingam

சீமெந்துக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

கதிர்

எஸ்பியின் பாதுகாவலர்களுக்கு மறியல்

G. Pragas