in ,

கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் இருப்பதி நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.க.அகிலா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.ஜெயக்குமார், சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் நிதிப் பொறுப்பாளர் எஸ்.தமிழினி, கழகத்தின் பிரதம ஊடக இணைப்பாளரும், கல்குடாத் தொகுதி பொறுப்பாளருமான ஊடகவியலாளர் ந.குகதர்சன், கழக பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வேப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. (150)

மட்டு. களஞ்சியசாலை திறந்து வைப்பு!

ஓ/எல் செய்திராத அமைச்சரவை குழுவை எப்படி அனுமதிப்பது – அரசின் மீது சீறிப்பாய்ந்தார் பேராயர்!