கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

கல்குடா ஊடகவியலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சீருடை அறிமுகம்

கல்குடா ஊடகவியலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வாழைச்சேனை தனியார் விடுதியில் நேற்று (03) இரவு நடைபெற்றது.

கல்குடா ஊடகவியலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.முர்ஷித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஹாதி, ஏ.எல்.எம்.பாறூக் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தவிசாளரும், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் மங்கள செனரத்தின் சேவையை பாராட்டி கல்குடா ஊடகவியலாளர் கூட்டுறவு ஒன்றியத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட மங்கள செனரததின், புதிய ஜனநாய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவித்தமைக்கு சம்பந்தன் ஐயாவுக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டார். மேலும்,

சஜித் பிரேமதாசவிற்கு சம்பந்தன் ஐயா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு வழங்கியுள்ளமை எமக்கு பாரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. எமக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாடு முழுவதும் அதி கூடிய வாக்குகளும் வெற்றி பெறுவது நிச்சயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்து வாழும் அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிறைவேற்றுவேன். நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் காலத்தில் என்னால் முடிந்த வேலைத் திட்டங்கள் அனைத்தினையும் நடைமுறைப்படுத்துவேன் – என்றார். (NK)

Related posts

கோத்தாவை எதிர்த்து சுமங்கல தேரர் உண்ணாவிரதம்

G. Pragas

கல்லூரிக்குள் வாள் வெட்டு! ஒருவர் பலி

G. Pragas

தமிழர் பகுதியை அபகரிக்கும் ஆரம்ப அடியை வைத்துள்ளார் ஞானசார தேரர்

G. Pragas

Leave a Comment