கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்!

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளி வந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடினார்கள்.

இந்த சம்பவம் இன்று (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாகி வெளியேறுவதாகவும் தகவல் ஒன்று பரவியது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் ஆவியாகி சூடானதாக எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இறுதியாக உண்மை தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் நிலவிய சிறுபதற்றம் தெளிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர் கொள்ளை; ஐவர் கைதாகினர்!

G. Pragas

விவசாயிகள், வர்த்தகர்களுக்கு அரசு அறிமுகப்படுத்தும் புதிய முறை!

Tharani

எரிபொருள் விலைத் திருத்தம்; நிதி அமைச்சு திடீர் பல்டி

G. Pragas