கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கல்முனை உப பிரதேச செயலகம் இந்த ஆட்சியில் கிடைக்கும் – ஞானசார தேரர்

அம்பாறை – கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் பெற்றுத்தருவதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பெரிய நீலாவணை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக நேற்று (15) இரவு விஜயம் செய்த ஞானசார தேரரை இடைமறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதம் இருந்தவருமான ச.ராஜன் உப பிரதேச செயலகம் தொடர்பான கடந்தகால வாக்குறுதி என்னவானது என கேள்வி எழுப்பினார்.

இதன்போதே ஞானசார தேர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், “கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் தரம் உயர்த்தி தருவோம். அவசரப்படாமல் காத்திருங்கள்” – என்று கூறினார். (ஷி)

Related posts

மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை – மார்ச் 5ம் திகதி

Tharani

காங்கேசன்துறையில் இருந்து மஹரகம வைத்தியசாலை ஊடாக புதிய பஸ் சேவை!

G. Pragas

பொலிஸ் ஊடக பிரிவு மீண்டும் ஆரம்பம்!

reka sivalingam