செய்திகள் யாழ்ப்பாணம்

கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் கதவடைப்பு

யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கதவடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை எனவும் வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும், இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ்.மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்! – சஜித்

G. Pragas

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

Tharani

100 நாட்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – சிவாஜி

Bavan

Leave a Comment